Skip to content

Latest commit

 

History

History
40 lines (40 loc) · 5.29 KB

year.md

File metadata and controls

40 lines (40 loc) · 5.29 KB
  1. இவ்வருடம் இதுவரை செய்யாத எதை செய்தாய்?
  2. உன்னுடைய புத்தாண்டு உறுதிமொழிகளை கடைபிடித்தாயா?
  3. உனக்கு நெருங்கிய எவராவது குழந்தை பெற்றாரா?
  4. உனக்கு நெருங்கிய எவராவது இறந்தாரா?
  5. எந்த நகரங்கள்/மாநிலங்கள்/நாடுகளுக்கு சென்றாய்?
  6. இவ்வாண்டு இல்லாத எதை அடுத்தாண்டு பெற விரும்புகிறாய்?
  7. இவ்வாண்டின் எந்த தேதி உன் நினைவில் என்றென்றும் அழுத்தமாக பதிந்திருக்கும்? எதனால்?
  8. இவ்வாண்டு உன் மிகப்பெரிய சாதனை என்ன?
  9. இவ்வாண்டு உன் மிகப்பெரிய தோல்வி என்ன?
  10. வேறென்ன இன்னல்களை சந்தித்தாய்?
  11. நோய் அல்லது காயத்தால் அல்லல்பட்டாயா?
  12. நீ வாங்கிய சிறந்த பொருள் என்ன?
  13. யாருடைய நடத்தை கொண்டாட வைத்தது?
  14. யாருடைய நடத்தை அதிர்ச்சி அடைய வைத்தது?
  15. உன்னுடைய  செலவில் பெரும்பங்கு எங்கே சென்றது?
  16. நீ எதைக் குறித்து மிக மிக அதிகமாக உற்சாகமடைந்தாய்?
  17. எந்தப் பாடல் உனக்கு எப்போதும் இந்த ஆண்டை நினைவுப்படுத்தும்?
  18. கடந்த ஆண்டு இந்த நேரத்தை ஒப்பிடும்போது, நீ மகிழ்வாக இருக்கிறாயா? சோகமாக இருக்கிறாயா? குண்டாக இருக்கிறாயா? ஒல்லியாக இருக்கிறாயா? செல்வவானாக இருக்கிறாயா? வறியவனாக இருக்கிறாயா?
  19. எதை கொஞ்சம் அதிகமாக செய்திருக்கலாம் என்று கருதுகிறாய்?
  20. எதை கொஞ்சம் குறைவாக செய்திருக்கலாம் என்று கருதுகிறாய்?
  21. விடுமுறை நாட்களை எவ்வாறு கழித்துக் கொண்டிருக்கிறாய்?
  22. இவ்வருடம் காதலில் விழுந்தாயா?
  23. சென்ற ஆண்டு இந்த நேரம் வெறுக்காத யாரையாவது இப்போது வெறுக்கிறாயா?
  24. உனக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி எது? 
  25. நீ படித்த சிறந்த புத்தகம் எது?
  26. இவ்வாண்டு உன்னுடைய மிகப்பெரிய இசை சார்ந்த கண்டுபிடிப்பு எது?
  27. உனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் எது?
  28. உனக்கு மிகவும் பிடித்த உணவுவகை எது?
  29. நீ எதை வேண்டிப் பெற்றாய்?
  30. நீ எதை வேண்டிப் பெறாமல் போனாய்?
  31. உன்னுடைய பிறந்த நாளில் என்ன செய்தாய்?
  32. எந்த ஒரு விஷயம் உன்னுடைய வருடத்தை அளவிட இயலாத அளவுக்கு திருப்திகரமான ஒன்றாக மாற்றியிருக்கும்?
  33. இவ்வாண்டு உன்னுடைய சொந்த ஆடை நாகரிகத்தை எவ்வாறு விவரிப்பாய்?
  34. எது உன்னை இயல்பான மனநிலையில் வைத்திருந்தது?
  35. எந்த பிரபலத்தை நீ பெரிதும் ரசித்தாய்?
  36. எந்த அரசியல் நிகழ்வு உன்னை பெரிதும் தூண்டியது?
  37. யாரைப் பிரிவுழல்கிறாய்?
  38. நீ சந்தித்த சிறந்த புதிய மனிதர் யார்?
  39. எந்த மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடத்தை இவ்வாண்டு நீ கற்றாய் ?
  40. எந்த மேற்கோள் உன்னுடைய இவ்வருடத்தை தொகுத்துரைக்கும்?